என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
இந்தியன் 3 ரிலீஸ் யாரும் எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்
- இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம்
- பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரைப்படம் ஓடிடி-யில் வெளியானப்பிறகு உலமமுழுவது உள்ள மக்கள் படத்தை ட்ரோல் செய்ய தொடங்கினர். இந்தியன் தாத்தா தோற்றம் முதல், பிரியா பவானி சங்கர் நடிப்பு, ஷங்கர் இயக்கம் வரை இணையத்தில் கலாய்த்தி தள்ளினர்.
இதனால் இந்தியன் -3 திரைப்படம் திரையரங்க்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரான லைகா நிறுவனம் இந்தியன் 2 படத்தின் தோல்வியை அடுத்து இந்தியன் 3 படத்திற்கு மக்களிடம் பெரிதும் எதிர்ப்பார்ப்பு இல்லை என்பதால் திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுக்குறித்து இணையத்தில் இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது. இதுக்குறித்த எந்த அதிகாரப்பூர்வத் தகவலகளும் வெளியாகவில்லை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.