என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
முடிவுகளை எடுப்பது பெண்கள் கையில் உள்ளது- பாலியல் தொல்லை குறித்து சன்னிலியோன் கருத்து
- எது சரி என்று நினைக்கிறோமோ அதை செய்ய வேண்டும்.
- முடியாது என்று சொல்ல வேண்டிய இடத்தில் முடியாது என்று சொல்ல வேண்டும்.
ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வடகறி, ஓ மை கோஸ்ட், தீ இவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் மலையாள பட உலகில் பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்திய ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கொச்சியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சன்னி லியோனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்து சன்னிலியோன் கூறும்போது, "சொந்த அனுபவங்களை மட்டுமே என்னால் பேச முடியும். மற்றவர்கள் சொல்வது போன்ற தொல்லைகளை நான் சந்திக்கவில்லை. முடிவுகளை எடுப்பது பெண்கள் கையில் உள்ளது.
எது சரி என்று நினைக்கிறோமோ அதை செய்ய வேண்டும். முடியாது என்று சொல்ல வேண்டிய இடத்தில் முடியாது என்று சொல்ல வேண்டும். தவறு என்று தெரிந்தால் அந்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டும்.
எனக்கு பல கதவுகள் மூடப்பட்டன. அது பிரச்சினையாக தெரியவில்லை. ஒரு வாய்ப்பு போனால் பல வழிகளில் இன்னும் பல வாய்ப்புகள் வரும்'' என்றார்.