என் மலர்
சினிமா செய்திகள்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'SK25' படத்தில் இணைந்த ஜெயம் ரவி, அதர்வா
- இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.
- இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ' அமரன் '. இந்த படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது . இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார் .இருவரும் எதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியது அதிகம் பாராட்டப்பட்டது.
இப்படம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார் என்று படக்குழு அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
#SK25 ?✨@siva_kartikeyan @Sudha_Kongara @actor_jayamravi @Atharvaamurali @DawnPicturesOff @Aakashbaskaran @gvprakash @sreeleela14 @dop007 @editorsuriya @arvaround @bindiya01@supremesundar @rhea_kongara @devramnath @SureshChandraa @DoneChannel1 @teamaimpr pic.twitter.com/amQUzyVaD0
— Red Giant Movies (@RedGiantMovies_) December 14, 2024