என் மலர்
சினிமா செய்திகள்
அரசியல் படத்தில் ஜெயம் ரவி.. 'டாடா' இயக்குநருடன் இணைந்த படம் குறித்த அப்டேட்
- காதலிக்க நேரமில்லை படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
- ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவரது சமீபத்திய படங்கள் 'பிரதர்', 'ஜீனி' மற்றும் 'காதலிக்க நேரமில்லை' ஆகியவை. ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்த காதலிக்க நேரமில்லை படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஜெயம் ரவி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபரில் அறிவித்தது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இது ஜெயம் ரவியுடன் அவர்கள் இணையும் 3-வது படம்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெயம் ரவி, தனது 34 வது படம் குறித்து மனம் திறந்துள்ளார். -அடுத்து நான் டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபுவுடன் ஒரு படம் செய்யப் போகிறேன், அவரது டாடா படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் எனது படம் அரசியல் மற்றும் நல்ல வெகுஜன படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
We are beyond proud & excited to announce that our next film is @actor_jayamravi's #JR34 Directed by @ganeshkbabu from the director of "DADA" A @Jharrisjayaraj Musical ?????? ?????? ????....?@screensceneoffl @senthilkumarsmc @skiran_kumar @onlynikil pic.twitter.com/BieVIpimRF
— Screen Scene (@Screensceneoffl) October 5, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.