search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆண்டிரியாவின்  சொக்க வைக்கும் குரலில் ஜாலியோ ஜிம்கானாவின்; பாடல் வெளியானது
    X

    ஆண்டிரியாவின் சொக்க வைக்கும் குரலில் 'ஜாலியோ ஜிம்கானாவின்; பாடல் வெளியானது

    • ஜாலியோ ஜிம்கானா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
    • இப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்.

    பிரபு தேவா கடைசியாக நடித்து வெளியான பேட்ட ராப் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. திரைப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வசூலை பெறவில்லை.

    இதைத்தொடர்ந்து முசாசி, ஃபளாஷ் பேக், வுல்ஃப் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது, படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    சக்தி சிதம்பரத்துடன் இணைந்து பிரபு தேவா மூன்றாம் முறை பணியாற்றியுள்ளார். இதற்கு முன் சார்லி சாப்லின்2002 , சார்லி சாப்லின்-2 2019 என்ற படங்களில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இவருடன் அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், சாய் தீனா, யாஷிகா ஆனந்த் மற்றும் மதுசுதன் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் பிரபு தேவா படம் முழுக்க ஒரு பிணமாக நடித்துள்ளார், தென்காசியை சேர்ந்த குடும்பம் இந்த பிணத்தை கொடைக்கானலில் சேர்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனை அவர்கள் எவ்வாறு செய்தார்கள் என்பதை மிகவும் நகைச்சுவை நிறைந்த கதைக்களமாக இயக்கியுள்ளார்.

    படத்தின் முதல் பாடலான `போலிஸ் காரனா காட்டிக்கிட்ட' பாடலின் லிரிக் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை நடிகை ஆண்டிரியா ஜெர்மியா பாடியுள்ளார். இப்பாடலின் வரிகளை சக்தி சிதம்பரம் எழுதியுள்ளார்.

    படம் விரைவில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×