search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாடலாசிரியர் சினேகனின் குழந்தைகளுக்கு காதல், கவிதை என பெயர் சூட்டிய கமல்ஹாசன்
    X

    பாடலாசிரியர் சினேகனின் குழந்தைகளுக்கு 'காதல்', 'கவிதை' என பெயர் சூட்டிய கமல்ஹாசன்

    • 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

    தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

    பிக்பாஸ் சீசன் 1-ல் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

    கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், அந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பெயர் வைத்து, தங்க வளையல் சூட்டியிருக்கிறார்.

    இது தொடர்பாக சினேகன் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "காதலர் தினத்தில் ... எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையல்களோடு ... "காதல்" என்ற பெயரையும் "கவிதை " என்ற பெயரையும் .. அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்ம பூஷன் கமஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள். நீங்களும் வாழ்த்துங்கள் காதல் - கவிதை-யை" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×