search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இன்ஸ்டாகிராம் பதிவில் இருந்து ஜானி மாஸ்டர் பெயரை நீக்கிய கியாரா அத்வானி
    X

    இன்ஸ்டாகிராம் பதிவில் இருந்து ஜானி மாஸ்டர் பெயரை நீக்கிய கியாரா அத்வானி

    • ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.
    • சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தில் ஜானி மாஸ்டர் பணியாற்றியுள்ளார்.

    தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநராக திகழ்பவர் ஜானி. கடந்த மாதம் இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.

    இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். மேலும் தெலுங்கு திரை உலகில் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.

    இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.

    இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தில் ஜானி மாஸ்டர் பணியாற்றியுள்ளார்.

    இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் பாடலுக்காக ஜானி மாஸ்டருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

    பாலியல் வழக்கில் ஜானி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை பாராட்டி கியாரா அத்வானி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த பதிவில் இருந்து ஜானி மாஸ்டரின் பெயரை கியாரா அத்வானி நீக்கியுள்ளார்.

    கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×