search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்தியன் 2 இருக்கட்டும்.. இந்தியன் 3 மாஸ் அப்டேட் என்ன தெரியுமா?
    X

    'இந்தியன் 2' இருக்கட்டும்.. 'இந்தியன் 3' மாஸ் அப்டேட் என்ன தெரியுமா?

    • சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவின் டிரண்ட் செட்டர் படமாக அமைந்தது.
    • இதற்கிடையே இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

    சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவின் டிரண்ட் செட்டர் படமாக அமைந்தது. லஞ்சத்தை எதிர்த்து போராடும் சுதந்திர போராட்ட தியாகி என்ற ஒன் லைனர் சேனாபதி கதாபாத்திரத்தில் கமலின் தனித்துவமான நடிப்பில் மெருகேறியிருக்கும். இதற்கிடையே இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் ஜூலை 12 ஆம் தேதி மொஹரம் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ஜூன் மாதமே படம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் மேலும் 1 மாதம் தாமதமாக படம் வெளியாவது ரசிகர்களை கவலையடையச் செய்தது. இந்நிலையில் ரசிகர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில், படத்தைக் குறித்த மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி இந்தியன் 2 டிரைலர் விரைவில் பிரமாண்டமான முறையில் வெளியிடப்படும் என்றும் இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்திற்கான டிரைலரும் இடம்பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியன் 2 படத்தின் கதை மிக நீளமாக சென்றதால் படத்தை 2 பாகங்களாக வெளியிட முடிவெடுக்கப்பட்டு அதன்படி, இந்தியன் 2 படத்துடன் இந்தியன் 3 படத்திற்கான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இதனாலேயே படத்தின் ரிலீஸும் தாமதமாகியுள்ளதாக தெரிகிறது. எது எப்படியாக இருந்தாலும் சேனாபதியை மீண்டும் திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    இதற்கிடையே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - ஆரசிபி மோதும் மேட்ச் இன்று (மே 18) மாலை சின்னச்சாமி அரங்கில் நடைபெற உள்ள நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் லைவில் மாலை 6மணியளவில் இயக்குனர் சங்கரும், கமல்ஹாசனும் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×