என் மலர்
சினிமா செய்திகள்
சூர்யா 45 திரைப்படத்தில் இணைந்த `லப்பர் பந்து'ஸ்வாசிகா மற்றும் இந்திரன்ஸ்
- சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.
- படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக படக்குழு அண்மையில் வெளியிட்டது.
சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சூர்யா வின் 45-வது திரைப்படமாகும் . இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இதனை படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்ளவதாக இருந்தது ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. தற்பொழுது படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது கோவையில் நடைப்பெற்று வருகிறது.
படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் படத்தில் ஸ்வசிகா மற்றும் மலையாள நடிகரான இந்திரன்ஸ் நடிக்கவுள்ளதாக படக்குழு தற்பொழுது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
லப்பர் பந்து திரைப்படத்தின் தினேஷுக்கு ஜோடியாக ஸ்வாசிகா நடித்து மக்களின் பெரும் வரவேற்பை பெற்றார். இப்படத்திலும் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என எதிர்ப்பார்ப்பு எழிந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.