search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மாஸ்டர் ஆஃப் லைட் - சர்வதேச அங்கீகாரம் பெற்ற சந்தோஷ் சிவன்
    X

    மாஸ்டர் ஆஃப் லைட் - சர்வதேச அங்கீகாரம் பெற்ற சந்தோஷ் சிவன்

    • இந்திய ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனுக்கு ‘தி பியர் ஆஞ்ஜெனியக்ஸ் எக்ஸ்லன்ஸ் இன் சினிமாடோகிராஃபி’ என்ற கவுரவ விருதை வழங்கியுள்ளனர்.
    • இது ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர்களுக்கு கொடுக்கப்படும் கவுரவ விருதாகும்.

    2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் அடுத்தடுத்து இந்திய குறும் படங்களுக்கும், திரைப்படங்களுக்கும், நடிகருக்கும் அங்கீகாரம் கிடைத்த நிலையில் தற்பொழுது இந்திய ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனுக்கு 'தி பியர் ஆஞ்ஜெனியக்ஸ் எக்ஸ்லன்ஸ் இன் சினிமாடோகிராஃபி' என்ற கவுரவ விருதை வழங்கியுள்ளனர்.

    இது ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர்களுக்கு கொடுக்கப்படும் கவுரவ விருதாகும். சந்தோஷ் சிவன் அவருக்கென ஒரு ஸ்டைலில் கதையை ஒளிப்பதிவில் காண்பிக்கும் திறனுள்ளவர். ஒரு குழந்தை எப்படி இந்த உலகை வியந்தும், புதுமையாக ஒவ்வொரு விஷயத்தை பார்க்கிறதோ. அதுப்போல தான் சந்தோஷ் சிவனின் காட்சிபதிவு இருக்கும்.

    இவரின் இந்த காட்சிபதிவு திறனுக்கு இவரின் அப்பா மிக முக்கிய காரணம். இவரது தந்தையான சிவசங்கரன் நாயர் பிரபலமான மலையாள இயக்குனர் ஆவார். இவர் ஒரு போட்டோ ஸ்டூடியோவை சொந்தமாக வைத்து இருந்தார். சிறு வயதில் இருந்தே தன் அப்பாவுடன் போட்டோ ஸ்டூடியோக்கு செல்வதும், அவர் எடுக்கும் போட்டோ ஷூட்டுகளுக்கு உதவி செய்து வந்து, ஒளிப்பதிவின் மீது ஆர்வம் பற்றிக் கொண்டது.

    1986 ஆம் ஆண்டு வெளியான `நிதியுடே கதா' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது ஒளிப்பதிவாளர் பயணத்தை தொடங்கினார். மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா மற்றும் தளபதி படங்களில் இவரது ஒளிப்பதிவின் திறமை அபாரமாக இருக்கும்.

    ரோஜா படத்தில் வரும் இயற்கை காட்சிகள், தளபதி படத்தில் ரஜினி கதாப்பாத்திரத்திற்கும் சூரியனுக்கும் ஒரு தொடர்பு இருந்துக் கொண்டே இருக்கும், அதை மிக அழகாக காட்சி படுத்திருப்பார். இவர் ஒளிப்பதிவில் உருவான சாருக்கான் ஓடும் ரெயிலில் ஆடிய 'சையா சையா' பாடல் இன்று வரை மக்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்தியன் சொசைட்டி ஆஃப் சினிமாடோகிராஃபர்ஸ் என்ற சங்கத்தை தொடங்கி வைத்தது சந்தோஷ் சிவன் ஆகும்.அமேரிகன் சொசைட்டி ஆஃப் சினிமாடோகிராஃபர்ஸ் பட்டியலில் இடம் பெற்ற முதல் ஆசிய ஒளிப்பதிவாளர் பெருமை இவரே சேறும். இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் 50-மேற்பட்ட டாக்குமண்டரிகளுக்கும் ஒளிப்பதிவு ஆற்றியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

    சர்வதேச அளவில் இதுவரை பல பிரபல ஒளிப்பதிவாளர் பெற்ற இந்த கேன்ஸ் கவுரவ விருதை நம் இந்தியாவை சேர்ந்த சந்தோஷ் சிவன் தற்பொழுது பெற்றுள்ளது மிகப் பெரிய ஒரு அங்கீகாரம் இந்திய சினிமா பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×