என் மலர்
சினிமா செய்திகள்
X
கரீனா கபூர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி
Byமாலை மலர்11 Dec 2024 4:19 PM IST
- பழம்பெரும் நடிகர் ராஜ் கபூரின் நூறாவது பிறந்தநாளை அவரது குடும்பம் விமர்சையாக கொண்டாடியது.
- ராஜ் கபூர் குடும்பத்தை சேர்ந்த ரன்பிர் கபூர், கரீனா கபூர் ஆகியோர் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
இந்தியாவில் பழம்பெரும் நடிகர்களுள் ஒருவர் ராஜ் கபூர். இவரின் குடும்பத்தை சேர்ந்த ரன்பிர் கபூர், கரீனா கபூர் ஆகியோர் தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
ராஜ் கபூர் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி பிறந்தார். இந்நிலையில் ராஜ் கபூரின் நூறாவது பிறந்தநாளை அவரது குடும்பம் விமர்சையாக கொண்டாடியது.
இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர் ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், சைஃப் அலிகான் உள்ளிட்ட ராஜ் கபூர் குடும்பத்தினரிடம் அவர் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
இது தொடர்பான புகைப்படங்களை கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Next Story
×
X