search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இசைக்கலைஞர்கள் சினிமாவை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்க கூடாது ; ஏ.ஆர். ரெஹைனா
    X

    "இசைக்கலைஞர்கள் சினிமாவை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்க கூடாது" ; ஏ.ஆர். ரெஹைனா

    • இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் பிரபல இசையமைப்பாளர் ஆவார்.
    • மியூசிக் வீடியோ சார்பில் தயாராகியுள்ள இந்த ஆல்பத்திற்கு எமில் மொஹம்மது இசையமைத்துள்ளார்.

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் பிரபல இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவருமான ஏ.ஆர்.ரெஹைனா சினிமாவையும் தாண்டி சுயாதீன பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் அவரது குரலில் சர்வதேச தரத்தில் லேட்டஸ்ட் ஆக உருவாகியுள்ள ஆல்பம் தான் 'மாத்திக்கலாம் மாலை'.

    மியூசிக் வீடியோ சார்பில் தயாராகியுள்ள இந்த ஆல்பத்திற்கு எமில் மொஹம்மது இசையமைத்துள்ளார். மணி வி.நாயர் இயக்கியுள்ள இந்த ஆல்பத்தில் சனூஜ் மட்டும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை சுகாசினி, இயக்குநர் மாதேஷ், பாடகி பாப் ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ஏ.ஆர் ரெஹைனா பேசும்போது பிரபலமான ஹீரோக்களின் படங்களை பார்த்துவிட்டு தான் பாடல்கள் ஹிட் ஆகி வந்தன. ஆனால் இப்போது படங்களில் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகின்றது. உலகம் முழுவதும் சுயாதீன பாடல்கள் மூலமாக இசைக்கலைஞர்கள் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இங்கே தான் நாம் திரையுலகையை சார்ந்து அதை மட்டுமே நம்பிக்கொண்டே இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். பாடல் என்பது சினிமாவில் இருந்தால் என்ன, தனி ஆல்பமாக இருந்தால் என்ன ? ரசிகர்கள் எப்போதும் கேட்கத்தான் போகிறார்கள்.

    இந்த பாடலை ரிலீஸ் வீடியோக்களாக வெளியிடுபவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன அதில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவுக்கு பரிசாக இரண்டு பேருக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×