என் மலர்
சினிமா செய்திகள்
இந்தியாவில் இனி இசைக் கச்சேரி நடத்த மாட்டேன்.. பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜித் ஆவேசம்
- உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்க்கு அவர் கடந்த சனிக்கிழமை நடந்த கன்சர்ட்டை அர்ப்பணித்திருந்தார்.
- நீங்கள் மதுபானங்களை தடை செய்யும் வரை நான் அதுகுறித்து படுவதை நிறுத்தமாட்டேன்
நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படாத வரை இந்தியாவில் இனி நேரலை இசைக் கச்சேரிகளை நடத்த மாட்டேன் என்று பிரபல பஞ்சாப் பாடகர் தில்ஜித் தோசன்ஜ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ரசிகர்களை கலங்கடிக்கும் இந்த அறிவிப்பை அவர் ஏன் வெளியிட்டார் என்றால் கடந்த சனிக்கிழமை சண்டிகரில் அவர் நடத்திய லைவ் கன்சர்ட்டில் போதுமான வசதிகள் இல்லாமல் திண்டாடியுள்ளார். கான்செர்ட்டின்போது அதிகாரிகளிடம் அவர் காட்டமாக நடந்துகொள்ளும் வீடியோவும் வெளியானது.
எங்களை (கலைஞர்களை) தொந்தரவு செய்வதற்குப் பதிலாக, உங்கள் கச்சேரி உள்கட்டமைப்பை மேம்படுத்துங்கள் அல்லது இந்தியாவில் நான் நிகழ்ச்சி நடத்த மாட்டேன். இதை நிர்வாகத்திடம் கூற விரும்புகிறேன். நேரலை நிகழ்ச்சிகளுக்கு இங்கு சரியான வசதிகள் இல்லை.
இது பெரிய வருவாய் ஆதாரமாகும். நிறைய பேர் இந்த நிகழ்வுகளில் வேலை செய்கிறார்கள் மற்றும் அதன் காரணமாக வேலைவாய்ப்பு பெறுகிறார்கள் என்று சமூக வலைத்தளம் வாயிலாக அவர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை சண்டிகரில் நடந்த தில்ஜித் இசைக் கச்சேரி அவரது "தில்-லுமினாட்டி இந்தியா டூர் 2024" இன் ஒரு பகுதியாகும். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்க்கு அவர் கடந்த சனிக்கிழமை நடந்த கன்சர்ட்டை அர்ப்பணித்திருந்தார்.
முன்னதாக ஐதராபாத்தில் இசைக் கச்சேரி நடத்தியபோது மதுபானங்களை குறித்து பாடக் கூடாது என்று நிர்வாகம் தெரிவித்தது. நீங்கள் மதுபானங்களை தடை செய்யும் வரை நான் அதுகுறித்து படுவதை நிறுத்தமாட்டேன் என்று தில்ஜித் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.