search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது- பா.ரஞ்சித்
    X

    அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது- பா.ரஞ்சித்

    • அம்பேத்கர் பெயருக்கு பின்னால் இருக்கும் பவரை இப்போது உணர்ந்திருக்கிறார்கள்.
    • பாபாசாகேப் அம்பேத்கரை பின்பற்றுபவனாக பெருமையாக உள்ளது.

    பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "எதிர்க்கட்சிகளுக்கு அம்பேத்கர் பெயரை தொடர்ந்து பல முறை முழக்கம் இடுவது வாடிக்கையாக இருக்கிறது.

    அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்து இருக்கும்" என்று கூறினார்.

    அமித்ஷாவின் கருத்துக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பாபாசாகேப் அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, புறம் தள்ளவும் முடியாது என அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாபாசாகேப் அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, புறம் தள்ளவும் முடியாது. அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது என்பதை அமித் ஷாவும் பாஜகவினரும் புரிந்துகொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.

    அம்பேத்கர் பெயருக்கு பின்னால் இருக்கும் பவரை இப்போது உணர்ந்திருக்கிறார்கள். அம்பேத்கரின் கருத்துகளை கொண்டு நமக்குள் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டிய நேரம் இதுதான் என நினைக்கிறேன். பாபாசாகேப் அம்பேத்கரை பின்பற்றுபவனாக பெருமையாக உள்ளது... ஜெய் பீம் என ரஞ்சித் கூறினார்.

    Next Story
    ×