என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
"வடக்கன்" தலைப்புக்கு சிக்கல்- தள்ளிப்போகும் ரிலீஸ் தேதி
- வடக்கன் என்ற தலைப்பை சென்சார் போர்ட் அனுமதிக்க மறுப்பு.
- "வடக்கன்" திரைப்படம் வருகிற மே 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
வெண்ணிலா கபடி குழு, எம் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 'வடக்கன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவருமே இப்படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகின்றனர். கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார்.
சமீபத்தில் 'வடக்கன்' படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
'வடக்கன்' திரைப்படம் வருகிற மே 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வடக்கன் என்ற தலைப்பை சென்சார் போர்ட் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால், வடக்கன் படத்தின் தலைப்பையும், ரிலீஸ் தேதியையும் மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து, 24ம் தேதி வடக்கன் வெளியாக இருந்த நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது.