search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முழு நேர அரசியலில் இறங்க திட்டம்: விஜய்யின் 69-வது படம் கைவிடப்படுகிறதா?
    X

    முழு நேர அரசியலில் இறங்க திட்டம்: விஜய்யின் 69-வது படம் கைவிடப்படுகிறதா?

    • சட்டமன்ற தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது.
    • அரசியல் பணிகளை தீவிரப்படுத்தினால் தான் தேர்தல் களத்தை வலிமையோடு சந்திக்க முடியும்.

    நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்தார்.

    68-வது படமான 'கோட்' படத்துக்கு பிறகு இன்னொரு படத்தில் நடித்து விட்டு முழு நேர அரசியலில் இறங்குவேன் என்றும் தெரிவித்தார்.

    எனவே விஜய்யின் கடைசி படமான 69-வது படத்தை இயக்குவது யார் அதில் யாரெல்லாம் நடிப்பார்கள். படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றெல்லாம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

    69-வது படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் 69-வது படத்தை கைவிட விஜய் முடிவு செய்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அடுத்த சட்டமன்ற தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. விஜய் 69-வது படத்தில் நடிக்க தொடங்கினால் அது முடிய ஒரு வருடம் ஆகிவிடும். இதனால் அரசியல் மற்றும் தேர்தல் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்படும்.

    இப்போதே சுற்றுப்பயணம், மாநாடு, மாவட்டம் தோறும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என்று அரசியல் பணிகளை தீவிரப்படுத்தினால்தான் தேர்தல் களத்தை வலிமையோடு சந்திக்க முடியும் என்று நெருக்கமானவர்கள் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.

    இதனாலேயே 69-வது படத்தில் விஜய் நடிக்க மாட்டார் என்று பேசப்படுகிறது. ஆனாலும் விஜய் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×