search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் அழைத்தால், அவரது கட்சியில் இணைவேன் - நடிகர் ராதாராவி
    X

    விஜய் அழைத்தால், அவரது கட்சியில் இணைவேன் - நடிகர் ராதாராவி

    • கடைசி தோட்டா படம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது.
    • இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.

    'லோக்கல் சரக்கு' படத்தை தொடர்ந்து ஆர்.வி.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்து தயாரிக்கும் படம் 'கடைசி தோட்டா'. அறிமுக இயக்குநர் நவீன் குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் டத்தோ ராதாரவி, வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரீஜா ரவி, யாஷர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

    மோகன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு நீலு குமார் வசனம் எழுதியிருக்கிறார். லோகேஷ்வர் படத்தொகுப்பு செய்ய, சரவணன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சினேகன் மற்றும் பாலு பாடல்கள் எழுதியுள்ளனர். வேலண்டினா மற்றும் யுகேஷ் ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளனர்.

    இந்த படம் தொடர்பான விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய டத்தோ ராதாராவி நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்றார். மேலும், அவர் அழைத்தால் அவரது கட்சியில் இணைய தயார் என்றும் தெரிவித்தார்.


    இது குறித்து பேசிய அவர், "கடைசி தோட்டா ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர். ஒரு ரிசார்ட்டில் நடக்கும் கதையை இயக்குநர் நவீன் குமார் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார். படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது."

    "இந்த படத்தில் நான் தான் நாயகன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் நாயகன் அல்ல, கதையின் நாயகன். அனைவருக்கும் நல்ல கதாபாத்திரம் தான், ஆனால் கதை கரு என் பக்கம் இருப்பதால், என்னை நாயகன் என்று சொல்கிறார்கள். வனிதா விஜயகுமாருக்கும் சிறப்பான வேடம். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்."

    "நடிகைகள் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும், இதை நான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறேன், ஆனால் அதை யாரும் கேட்பதில்லை. இந்த நிகழ்ச்சியில் கூட வனிதா கலந்துக்கொள்ளவில்லை என்பது படக்குழுவுக்கு வருத்தம் தான்."

    "சினிமாவில் எனக்கு 50 வது ஆண்டு, நான் இதையும் தாண்டி நடித்துக் கொண்டிருப்பேன். நடிகன் என்பவன் இறந்தும் நடிப்பவன். அவன் இறப்பு வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லாவா, அதேபோல் அவன் இறந்தாலும் அவன் நடித்த கதாபாத்திரங்களும், காட்சிகளும் அடிக்கடி ரசிகர்கள் கண் முன் வந்துக்கொண்டு தான் இருக்கும். அதனால், என்னுடைய நடிப்பு பயணம் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கும். தற்போது நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. விஜய் அரசியலுக்குள் நுழைந்திருப்பது வரவேற்க வேண்டியது தான். அவர் என்னை அழைத்தால் நிச்சயம் நான் அவருடன் இணைவேன்.," என்று தெரிவித்தார்.

    விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படமான இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    Next Story
    ×