search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நாளை தொடங்குகிறது..! கூலி படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற ரஜினிகாந்த்
    X

    நாளை தொடங்குகிறது..! "கூலி" படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற ரஜினிகாந்த்

    • படப்பிடிப்பு தொடர்ச்சியாக 35 நாட்கள் நடைபெற உள்ளது.
    • ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இப்பட பணிகள் துவங்க உள்ளதாக தகவல்.

    ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மகள் இயக்கத்தில் லால் சலாம், ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    அதன்படி, லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள 'கூலி' படத்தின் படப்பிடிப்பு நாளை ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இப்படத்தில் பிரபலங்கள் பலரும் நடிக்க உள்ளனர். படப்பிடிப்பு தொடர்ச்சியாக 35 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, 'கூலி' படத்தில் சினிமா ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் பணியாற்ற உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    சுமார் இரண்டு மாத கால ஓய்வு முடிந்துள்ள நிலையில், இன்று ஜூலை மாதம் 4ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்த் கூலி படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருக்கிறார்.

    அங்கு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இப்பட பணிகள் துவங்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×