என் மலர்
சினிமா செய்திகள்
ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்திய 'சப்தம்' படக்குழு
- ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது.
- தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த 'வல்லினம்' மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பார்டர்', 'குற்றம் 23' திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார்.
'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் ஆதி நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்த கடந்த டிசம்பர் மாதம் இப்படம் பிப்ரவரி 28-ந்தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், தற்போது புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் 'சப்தம்' திரைப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகும் என படக்குழு உறுதிப்படுத்தி உள்ளது.
Sound creates thrills! Want to know how? ?#Sabdham is releasing on February 28.#SabdhamFromFeb28
— Aadhi? (@AadhiOfficial) February 3, 2025
Starring @AadhiOfficial
An @dirarivazhagan Film
A @MusicThaman Musical
Produced by @7GFilmsSiva
@prosathish @S2MediaOffl @decoffl pic.twitter.com/rCfek2kP2I
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.