search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமின் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு
    X

    நடிகர் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமின் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

    • சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் பாலியர் புகார் அளிக்க வழக்குப்புதிவு செய்யப்பட்டர்.
    • உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் 30-ந்தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின்.

    மலையாள திரை உலகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில நடிகர்கள் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். நீதிபதி ஹேமா கமிட்டி விசாரணையும் இதனை உறுதிப்படுத்தியது.

    இதனைத் தொடர்ந்து பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது. இந்த குழு விசாரணையை தொடங்கிய நிலையில், பல்வேறு போலீஸ் நிலையங்களில் நடிகைகள் புகார்களின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதில் முக்கியமானவர் நடிகர் சித்திக். மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்த இவரை பாலியல் புகாரில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து தலைமறைவான அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின் வழங்கியது.

    அதன்பிறகு சித்திக், சிறப்பு புலனாய்வு குழு முன்பு கடந்த மாதம் 7 மற்றும் 12-ந்தேதி விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்தது. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமின் மனு காலம் முடிந்ததால், உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் திரிவேதி, சதீஷ் சந்திரசர்மா ஆகியோர் முன்னிலையில் முன்ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சித்திக்கின் இடைக்கால முன்ஜாமினை ஒரு வாரத்துக்கு நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×