என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
மோகன்லாலுடன் கதாநாயகி வேடத்தில் ஷோபனா - 'புது அப்டேட்'
- நடிகை ஷோபனா "நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
- மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும்
1980 - ம் ஆண்டு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷோபனா. 1984-ம் ஆண்டு மலையாளத்திலும் அறிமுகமானார்.
'தளபதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஷோபனா பிரபலமானார். அதன் பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி உள்பட ஏராளமான படங்களில் நடித்து வந்தார். கடைசியாக 'கோச்சடையான்' படத்தில் நடித்தார்.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக ஷோபனா இணைய தளத்தில் தற்போது அறிவித்துள்ளார். இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும். மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும்
இப்படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார்.இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல் -360 'என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார்.மேலும், மற்ற நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
மேலும் நடிகை ஷோபனா "நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்க உள்ளேன். இப் படத்தை தருண் மூர்த்தி இயக்குகிறார். இந்த படத்திற்கு ஹீரோ மோகன்லால் சார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.