search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சமுத்திரகனி நடித்த திரு.மாணிக்கம் படக்குழுவை பாராட்டிய சிவக்குமார்
    X

    சமுத்திரகனி நடித்த திரு.மாணிக்கம் படக்குழுவை பாராட்டிய சிவக்குமார்

    • இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம்.
    • திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.

    இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் சிவக்குமார் படக்குழுவை பாராட்டியுள்ளார். இயக்குனர் நந்தா பெரியசாமி மற்றும் சமுத்திரகனி இருவரும் சிவக்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×