என் மலர்
சினிமா செய்திகள்
சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது
- சூரி அடுத்ததாக விலங்கு வெப் சீரிஸ் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது.
இப்படத்தை தொடர்ந்து சூரி நடித்த கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
விடுதலை 2 படத்தை தொடர்ந்து நடிகர் சூரி அடுத்ததாக விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு மாமன் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
இந்நிலையில், 'மாமன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
The first look of #Maaman coming up tomorrow at 6.30 PM! Stay tuned for the excitement ahead! ??
— Actor Soori (@sooriofficial) January 15, 2025
Directed by @p_santh ?
A @HeshamAWmusic Musical ?
Produced by @kumarkarupannan
of @larkstudios1 @AishuL_ @DKP_DOP @g_durairaj @thecutsmaker @MaheshMathewMMS @dineshashok_13… pic.twitter.com/T9M0jLSRie