search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது - குரங்கு பெடல் டிரைலர்
    X

    விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது - குரங்கு பெடல் டிரைலர்

    • 'குரங்கு பெடல்' படத்தை அடுத்து எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்
    • இப்படம் வரும் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரெயிலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் பல வெற்றி படங்களை தயாரித்தும் வருகிறார்.

    சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைதொடர்ந்து 'குரங்கு பெடல்' படத்தை அடுத்து எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

    காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரெயிலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    கோடை விடுமுறையில் நாம் சிறுவயதில் செய்த குறும்பையும் விளையாட்டையும் கண் முன் காட்சி படுத்தியுள்ளனர். 5 நண்பர்கள் அவர்களது கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக செலவிடும் காட்சிகளும் அதில் யார் முதலில் சைக்கிள் ஓட்ட கத்துக் கொள்கிறார்கள போன்ற காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது.

    சைக்கிள் ஓட்டுவதற்காக் ஒரு சிறுவன் எவ்வளவு முயற்சிகளை செய்கிறான் அதற்கடுத்து என்ன நடந்தது என டிரைலர் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×