என் மலர்
சினிமா செய்திகள்
நிச்சயமாக மிக முக்கியமான திரைப்படமா பாட்டல் ராதா இருக்கும் - மாரி செல்வராஜ்
- இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா."
- திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா." பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ள பாட்டல் ராதா திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியது மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக ஆனது.
இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் படக்குழுவை பாராட்டியுள்ளார் அதில் அவர் கூறியதாவது " நாம் சிறிதாக பழகக்கூடிய பழக்க வழக்கங்கள் எப்படி நம்மையும் , நம் குடும்பத்தையும் சீரழிக்கிறது என்பதை இப்படம் எடுத்துக்காட்டுகிறது. இது படமா, இல்ல நம்ம சுத்தி நடக்குற வாழ்க்கையா? -ன்னு கேள்வி கேட்கும் வகையில் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது. மிக அவசியமான திரைப்படம் பாட்டல் ராதா. குரு சோமசுந்தரம் இந்த கதாப்பாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். நிச்சயமாக இது ஒரு முக்கிய திரைப்படமா அமையும்" என கூறியுள்ளார்.
A relatable and relevant Comedy-Drama ?3 Days to Go for #BottleRadha Watch the Trailer here▶ https://t.co/jYtX7QKngs #BottleRadhaFromJan24 ?A film by @DhinakaranyojiA @RSeanRoldan Musical@beemji #NeelamProductions @balloonpicturez #ArunBalaji @generous_tweet… pic.twitter.com/sMtl8x7S6M
— Neelam Productions (@officialneelam) January 21, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.