என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
'சூர்யா 44': கார்த்திக் சுப்புராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சூர்யா
- பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ்
- வித்தியாசமான கதைக் களங்களில் படம் எடுப்பதில் கார்த்திக் சுப்பராஜ் திறம் பெற்றவர்
பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். வித்தியாசமான கதைக் களங்களில் படம் எடுப்பதில் கார்த்திக் சுப்புராஜ் திறம் பெற்றவர்.
இவர் படம் இயக்கும் பாணி ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான குவெண்டின் டேரண்டின்னோவை பிரதிபலிக்கும். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார்.
மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்தப்படம்.ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா போட்டி போட்டு நடித்துருப்பர்
சினிமாவையே கதைக்களமாக வைத்து திரைப்படம் இயக்குவதில் கார்த்திக் சுப்புராஜ் வல்லமை வாய்ந்தவர். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அடுத்தபடம் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.
சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதீகாரப்பூர்வ அறிவிப்பை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப்படம் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியில் கதைக்களமாக உருவாகவுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திலிருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தின் மேல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூர்யா புதிய தொடக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.