என் மலர்
சினிமா செய்திகள்
யார் வேணாலும் தப்பு செய்யலாம் - எதிர்பார்ப்பை எகிற செய்யும் சுழல் 2 டிரெய்லர்

- சுழல் இணைய தொடரை புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ளனர்.
- இந்த இணைய தொடருக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
விக்ரம் வேதா படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் தயாரான முதல் வெப் தொடர் 'சுழல்- தி வோர்டெக்ஸ்'. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் கதிர், சந்தானபாரதி, பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த வெப் தொடருக்கு, சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். அமேசான் பிரைமில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சுழல் 2 தி வோர்டெக்ஸ் தொடரின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த வெப் தொடர் வருகிற 28ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த தொடர் பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றுக்குள் நடக்கும் சம்பவங்களை தழுவிய கதையம்சம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த டிரெய்லர் இணைய தொடருக்கான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.