என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்.. வைரலாகும் வீடியோ.. பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்.. வைரலாகும் வீடியோ..](https://media.maalaimalar.com/h-upload/2022/08/16/1747231-4.jpg)
அஜித்
பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்.. வைரலாகும் வீடியோ..
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ஏகே 61.
- இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
மேலும், சமுத்திரக்கனி, வீரா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
அஜித்
இந்நிலையில், நடிகர் அஜித் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் வீடியோவை ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அஜித் மக்களோடு மக்களாக பயணம் செய்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அஜித்
அதுமட்டுமல்லாமல், நடிகர் அஜித், ஏகே 61 படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்றுள்ளதாகவும் அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.