search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெண்ணிலா கபடி குழு நடிகர் ஹரி வைரவன் காலமானார்..
    X

    ஹரி வைரவன்

    'வெண்ணிலா கபடி குழு' நடிகர் ஹரி வைரவன் காலமானார்..

    • வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹரி வைரவன்.
    • இவர் இன்று அதிகாலை காலமானார்.

    வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.


    ஹரி வைரவன்

    இந்நிலையில், இன்று அதிகாலை 12.15 மணியளவில் இவர் காலமானார். இவருடைய இறப்பு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    ஹரி வைரவன் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் கடச்ச நேந்தலில் இன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×