என் மலர்
சினிமா செய்திகள்
படப்பிடிப்பில் நடிகர் திடீர் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி..
- நடிகர் காலித், பெரியார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு அறிமுகமானார்.
- இவர் படப்பிடிப்பின் போது திடீரென மரணமடைந்தார்.
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் நடிகர் காலித். மலையாள பட நகைச்சுவை நடிகரான இவர் 1973-ம் ஆண்டு பெரியார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தாப்பானா, வெள்ளம் உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
ஜூட் ஆண்டனியின் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் படத்திற்காக கொச்சியில் நடந்த படப்பிடிப்பில் காலித் பங்கேற்றார். அப்போது படப்பிடிப்பின் இடையில் கழிவறை சென்ற அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
நடிகர் காலித்
மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் காலித் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு காலித் ரகுமான், ஷைஜூ காலித் மற்றும் ஜிம்ஷி காலித் என 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் காலித் ரகுமான் மலையாள பட உலகில் பிரபல இயக்குனராக உள்ளார். மற்ற 2 பேரும் ஒளிப்பதிவாளர்களாக உள்ளனர்.
மரணமடைந்த நடிகர் காலித்துக்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.