என் மலர்
சினிமா செய்திகள்
X
நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் ராதிகா கொண்டாடிய தீபாவளி.. வைரலாகும் புகைப்படம்..
Byமாலை மலர்24 Oct 2022 5:45 PM IST (Updated: 24 Oct 2022 5:45 PM IST)
- தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ராதிகா.
- இவர் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் 'கொலை', 'லவ் டுடே', 'சந்திரமுகி -2' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சிவகுமார் குடும்பத்துடன் ராதிகா
இந்நிலையில், ராதிகா சரத்குமார் தீபாவளி பண்டிகையை நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இவர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் அவரது மனைவி ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நேற்று மாலை தீபாவளியை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ராதிகா பகிர்ந்துள்ளார்.
Next Story
×
X