என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
சமூக சேவகன் என்பது வேடிக்கையான வார்த்தை - டுவிட்டரில் இருந்து விலகியதற்கு விளக்கமளித்த சித்தார்த்
- நடிகர் சித்தார் 'டக்கர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'டக்கர்' திரைப்படம் வருகிற ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
டக்கர்
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் சித்தார்த்திடம் டுவிட்டரில் இருந்து விலகியதற்கான காரணம் கேட்கப்பட்டத்து. அதற்கு அவர், "சமூக சேவகன் என்பது வேடிக்கையான வார்த்தை ஆனால், நான் எப்போதும் உண்மையை பேசியுள்ளேன். ஒரு நடிகனாக நான் இதை வருடம் முழுவதும் செய்கிறேன். ஆனால், என் உடன் பணியாற்றும் எந்த நடிகரும் நடிகையும் யாரும் இதை செய்வதில்லை. அவர்கள் ஏன் பேசவில்லை, நான் மட்டும் ஏன் பேசுகிறேன் என்று யாரும் அவர்களிடம் கேட்டதில்லை.
சித்தார்த்
உலகத்தில் உள்ள அனைத்து கொடுமைகளுக்கும் எதிராக குரல் கொடுக்க நான் சூப்பர் ஹீரோ அல்ல. இது எனக்கு பிடிக்கவில்லை. பல இயக்குனர்கள் என் மீது கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தேன். 'இவர் உண்மையைப் பேசுபவர்' என்று மக்களுக்கு அறிமுகம் செய்துவிட்டேன். இனி 'இவர்தான் சிறந்த நடிகர்' என்று அறிமுகப்படுத்த விரும்பினேன்" என்று கூறினார்.