என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
இன்னும் உங்க சாங் இளமையா இருக்கு.. எனக்கு தான் வயசு ஆயிடுச்சு.. நடிகர் சிவகார்த்திகேயன்
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
- இவ்விழாவில் திரைப்பிரலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
'கர்ணன்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் 'மாமன்னன்'. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தில் தலைவருமான கமல்ஹாசன், இயக்குனர்கள் பா.இரஞ்சித், வெற்றிமாறன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, நடிகர்கள் வடிவேலு, சிவகார்த்திகேயன், சூரி, இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, "ரகுமான் சார் , உங்க டான்ஸ் ரொம்ப நல்லா இருக்கு சார். இன்னும் டெலிபோன் மணிபோல் சாங் செம்ம இளமையா இருக்கு... எனக்கு தான் வயசு ஆயிடுச்சு. நானும் மாரி செல்வராஜ் பிரதரும் ஒண்ணா கிரிக்கெட் லாம் விளையாடி இருக்கோம். அப்போ அவர் ஒழுங்காக கிரிக்கெட் ஆடல, ஆனா எடுத்த படம் எல்லாமே சிக்சர் தான்.
பரியேறும் பெருமாள், மாரி செல்வராஜ் சிறந்த இயக்குனர் என்று உலகிற்கு எடுத்துரைத்தது. இன்று வெற்றி மாறன் சாருக்கு கிடைத்த வரவேற்பு ஊக்கமளிக்கிறது. மாற்று சினிமாக்கான முயற்சியை எடுத்து கைத்தட்டல்களுக்குச் சொந்தமாகியிருக்கிறார். அதை தொடங்கி வைத்தது கமல் சார் தான். விதை கமல் சார் போட்டது" என்று அவர் கூறினார்.