என் மலர்
சினிமா செய்திகள்
வாய்ப்பு கேட்டேன்.. கடைசி வரை தரவில்லை - நடிகர் கிருஷ்ணா
- நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள இணைய தொடர் "ஜான்ஸி".
- இதனை இயக்குனர் திரு இயக்க நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ளார்.
இயக்குனர் திரு இயக்கத்தில் நடிகை அஞ்சலி நடிப்பில் 10 எபிசோடுகளாக உருவாகியுள்ள திரில்லர் இணைய தொடர் "ஜான்ஸி". இப்படத்தை டிரைபல் ஹார்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ளார். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இத்தொடரை கணேஷ் கார்த்திக் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார்.
வாழ்வின் கடந்த கால நினைவுகளை மறந்து போன ஒரு பெண், கடந்த காலத்தின் பின்னிருக்கும் ரகசியங்களை தேடுவது போன்று இடம்பெற்றிருக்கும் இந்த தொடர் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.
இத்தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இதில் நடிகரும் தயாரிப்பாளருமான கிருஷ்ணா பேசியதாவது, இந்த வருடம் எனக்கு படம் எதுவும் வரவில்லை என்பதால் உங்களை சந்திக்க முடியவில்லை. ஆனால் அடுத்ததாக "பெல் பாட்டம்" வருகிறது. எனக்கு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது கனவு. இது எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு. ஹாட்ஸ்டாரில் இந்த கதையை சொன்னவுடன் ஒப்புக்கொண்டார்கள்.
ஜீகேயிடம் இதை பெரிய டைரக்டர் பண்ணினால் நல்லாருக்கும் என்றவுடன் ஜீகே ஒப்புக்கொண்டார். திருவிடம், ஜீகே ஒரு எபிஸோடாவது டைரக்ட் பண்ணணும் என்றேன். அவரும் பெருந்தன்மையாக ஓகே என்றார். அஞ்சலி போன்ற திறமையான நடிகர்களை பல மொழிகளிலும் இருந்து கூட்டி வந்திருக்கிறோம். நான் இதில் நடிக்கவில்லை எனக்கு எதாவது வாய்ப்பு கொடுங்க எனக் கேட்டேன். ஆனால் கடைசி வரை தரவில்லை. இந்த தொடர் மிக நன்றாக வந்துள்ளது. முக்கியமாக இத்தொடருக்கு பெரும் ஒத்துழைப்பு தந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார்க்கு நன்றி. இது எங்கள் மனதுக்கு பிடித்த படைப்பு, உங்களுக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.