search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சொந்த வீடு வாங்க குடும்பத்துடன் போராடும் நடிகர் விமல்
    X

    விமல்

    சொந்த வீடு வாங்க குடும்பத்துடன் போராடும் நடிகர் விமல்

    • நடிகர் விமல் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • இப்படத்தை சிம்புதேவன், ஜெயம் ராஜா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவம் ராஜாமணி இயக்கியிருக்கிறார்.

    எஸ்.ஜே.சூர்யா - யாஷிகா ஆனந்த் நடிப்பில் ஜூன் 24-ம் தேதி வெளியாகவுள்ள "கடமையை செய்" படத்தை தயாரித்துள்ள கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் டி.ஆர்.ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் அடுத்ததாக விமல் நாயகனாக நடிக்கும் மஞ்சள் குடை படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.

    மஞ்சள் குடை

    இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக வால்டர் படத்தில் நடித்த ஷெரின் கஞ்ச்வாலா நடித்துள்ளார். இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், ரேணுகா ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ராமர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை சிம்புதேவன், ஜெயம் ராஜா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவம் ராஜாமணி கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை பிரவீன் குமார் மற்றும் இசையை ஹரி கவனிக்கின்றனர்.

    மஞ்சள் குடை


    படம் பற்றி இயக்குனர் சிவம் ராஜாமணி கூறியது, ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை இது. இன்றைய சூழலில் மிடில் கிளாஸ் மக்களின் பெரிய போராட்டமே வீட்டு வாடகை தான். அப்படி மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் நாயகன் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு வீடு வாங்க நினைக்கிறார். அதற்கு எப்படி பணம் சேர்க்கிறார்கள் புது வீடு வாங்குவதற்கு அவர்கள் படும் போராட்டங்கள், இறுதியில் வீடு வாங்கினார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் லைவ் லொகேஷனில் படமாக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது என்றார் இயக்குனர் சிவம் ராஜாமணி.

    Next Story
    ×