என் மலர்
சினிமா செய்திகள்
குலசாமி பட விழாவுக்கு வர பணம் கேட்டேனா..? நடிகர் விமல் விளக்கம்
- இயக்குனர் குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவான திரைப்படம் குலசாமி.
- இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வர விமல் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டதாக தகவல் பரவியது.
நடிகர் விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவான திரைப்படம் குலசாமி. இப்படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார். மிக் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் அமீர், விமல் வராததை கண்டித்து பேசினார். தொடர்ந்து விழாவிற்கு வர விமல் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு கொடுக்காததால் புறக்கணித்து விட்டதாக தகவல் பரவியது.
விமல்
இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு விமல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, குலசாமி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு வர நான் பணம் கேட்டேன் என்று சொல்வது தவறான தகவல். இயக்குனர் அமீரை தொடர்பு கொண்டு இதனை விளக்கி விட்டேன். அன்றைய தினம் 'தெய்வமச்சான்' பட நிகழ்ச்சி இருந்தது. அதற்கான தேதியை அந்த படக்குழுவினர் ஒரு மாதத்துக்கு முன்பே என்னிடம் சொல்லி விட்டனர். ஆனால், 'குலசாமி' பட விழா நிகழ்ச்சி பற்றி நான்கு நாட்களுக்கு முன்புதான் என்னிடம் சொன்னார்கள். இரண்டையும் ஒரே தேதியில் வைத்துவிட்டனர். அதனால்தான் வர முடியவில்லை என்று கூறினார்.