என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து கலைப்புலி தாணு அலுவலகத்தில் ரெய்டு பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து கலைப்புலி தாணு அலுவலகத்தில் ரெய்டு](https://media.maalaimalar.com/h-upload/2022/08/02/1739656-dhan.jpg)
கலைப்புலி தாணு
பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து கலைப்புலி தாணு அலுவலகத்தில் ரெய்டு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அசுரன், கர்ணன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தவர் கலைப்புலி தாணு.
- இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
1985-ஆம் ஆண்டு யார் என்ற படத்தின் முலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கலைப்புலி தாணு. அதன்பின் கிழக்கு சீமையிலே, விஐபி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆளவந்தான், காக்க காக்க, மாயாவி, சச்சின், தெறி, கபாலி, துப்பாக்கி, அசுரன், கர்ணன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படங்களை தயாரித்து வருகிறார்.
கலைப்புலி தாணு
இந்நிலையில் சென்னை, தி.நகர் பிரகாசம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்தில் இன்று காலை முதல் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் சில தயாரிப்பாளர்கள் பெயரும் வருமான வரித்துறை சோதனை பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.