என் மலர்
சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இவர்களின் சந்திப்பிற்கு காரணமாக இருப்பது ஆசிர்வாதம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த செல்பி..

- இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
- இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.
ரஜினி - ஏ.ஆர்.ரகுமான்
இவர் தற்போது 'லால் சலாம்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
ரஜினி- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - ஏ.ஆர்.ரகுமான்
இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடிகர் ரஜினியை சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "இரண்டு அற்புதமான மனிதர்களின் சந்திப்பிற்கு நீங்கள் காரணமாக இருப்பது மிகப்பெரிய ஆசிர்வாதம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இயக்கிய 'லி மஸ்க்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
When two amazing human beings meet and you happen to be the reason ..you are blessed and of course they are THE best! @arrahman sir @rajinikanth appa ! pic.twitter.com/8WC83GpV6E
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) November 30, 2022