search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இது வெறும் பெயரல்ல... வெளிநாட்டு கவுரவத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அறிக்கை
    X

    ஏ.ஆர். ரஹ்மான்

    "இது வெறும் பெயரல்ல"... வெளிநாட்டு கவுரவத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அறிக்கை

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
    • இவர் இசையில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் - 1.

    ரோஜா படத்தில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து 'ஹாலிவுட்' வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.

    தற்போது, இவரின் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    ஏ.ஆர். ரஹ்மான் தெரு

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில், கனடாவின் மார்க்கம் என்ற நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இதை நான் என் வாழ்நாளில் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கனடா 'மார்க்கம்' நகரின் (Markham city) மேயர் ஃபிராங்க் ஸ்கார்பிட்டி, கவுன்சிலர், இந்திய தூதரக ஜெனரல் (அபூர்வா ஸ்ரீவஸ்தவா) மற்றும் கனடிய மக்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


    ஏ.ஆர். ரஹ்மான் தெரு

    ஏ.ஆர்.ரஹ்மான் என்பது என்ற பெயர் என்னுடையதல்ல. இதற்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது பொதுவான கடவுளின் குணம், நம் அனைவரிடமும் அது உள்ளது. எந்த ஒரு நபரும் இரக்கமுள்ளவரின் பணியாளாக மட்டுமே இருக்க முடியும். எனவே, அந்தப் பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்.

    என்னுடன் பணியாற்றிய அனைத்து படைப்பாளிகளும், நான் உயர உத்வேகத்தை அளித்தனர். சினிமாவின் நூறாண்டுகளைக் கொண்டாடவும், எழுச்சி பெறவும் பழம்பெரும் ஜாம்பவான்கள் உத்வேகத்தை அளித்தார்கள். நான் கடலில் ஒரு மிகச்சிறிய துளி. மேலும் பலவற்றைச் செய்வதற்கும், சோர்வடையாமல், ஓய்வு பெறாமல், இன்னும் பலவற்றைச் செய்வதற்கும், ஊக்கமளிப்பதற்கும் இது எனக்கு மகத்தான பொறுப்பைக் கொடுப்பதாக உணர்கிறேன்.

    ஒருவேளை நான் சோர்வடைந்தாலும், நான் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும், இன்னும் இணைத்துக்கொள்ள அதிகமான மக்கள் உள்ளனர், இன்னும் அதிக தூரம் கடக்க வேண்டியுள்ளது என்பதை நினைவில் கொள்வேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×