என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
முத்தத்தால் வந்த சிக்கல்.. ஆதிபுருஷ் இயக்குனருக்கு பா.ஜ.க கண்டனம்
- பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
- இதையடுத்து நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
ஆதிபுருஷ்
'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வருகிற 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு நூதன அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ஓம் ராவத் -கீர்த்தி சனோன்
இதையடுத்து நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் 'ஆதிபுருஷ்' படக்குழுவினர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது தரிசனத்தை முடித்துவிட்டு காரில் கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோனை ஓம் ராவத் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். கோவிலின் முன் இயக்குனர் ஓம் ராவத் இவ்வாறு செய்தது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஓம் ராவத் -கீர்த்தி சனோன்
இந்நிலையில், திருப்பதி கோவிலில் வைத்து நடிகை கீர்த்தி சனோனை ஓம் ராவத் முத்தமிட்டதற்கு ஆந்திர மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கோவிலுக்கு வந்தவர்கள் அதன் புனிதத்தை காக்க வேண்டும். உடனடியாக இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பேட்டியளித்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.