என் மலர்
சினிமா செய்திகள்
வெளியானது தனுஷ் படத்தின் புதிய அப்டேட்
- மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம்.
- இப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
திருசிற்றம்பலம் படக்குழு
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர்.
'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ஜூலை 15-ஆம் தேதி வெளியாகும் என வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Enjoyed writing this song. Hope you all like it. Megham karukkadha 2nd single from #Thiruchitrambalam from July 15 ! #dna https://t.co/Puv2r8hI26
— Dhanush (@dhanushkraja) July 13, 2022