என் மலர்
சினிமா செய்திகள்

டோனி - விஜய்
விஜய் படத்தை தயாரிக்கும் எம்.எஸ்.டோனி

- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.
- இதற்கான பணிகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இதில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் 'தளபதி 70' படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டோனிக்கு '7' விருப்பமான எண் என்பதால் விஜய்யின் 70வது படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.