என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
'ஜெய்பீம்' படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது- சுசீந்திரன்
- தமிழ் சினிமாவிற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- தேசிய விருது பட்டியலில் இடம் பிடித்த படக்குழுவினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தேசிய விருது பட்டியலில் இடம் பிடித்த படக்குழுவினருக்கு திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க 'ஜெய்பீம்', 'கர்ணன்', 'சார்ப்பட்டா பரம்பரை' போன்ற படங்களுக்கு விருது கிடைக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு தேசிய விருது பட்டியல் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரன் 'ஜெய்பீம்' படத்திற்கு தேசிய விருது ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு விருது கிடைக்காதது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்ற ஆயிரம் கேள்விகள். 5 விருதுகள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்ததற்கு மகிழ்ச்சி வாழ்த்துகள் என்று கூறினார்.