என் மலர்
சினிமா செய்திகள்

ஷாருக்கான்
என்னை விட பிரபலமாவதை நான் விரும்பவில்லை.. ஷாருக்கான் அதிரடி
- ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.
- தற்போது ஷாருக்கான் சமூக வலைத்தளத்தின் வாயிலாக உரையாடி வருகிறார்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான், சமீபத்தில் வெளியான பதான் திரைப்படத்தில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் சாதனை படைத்தது. ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஷாருக்கான்
இந்நிலையில் ஷாருக்கான் சமூக வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு செல்ல பிராணிகள் பிடிக்குமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், என்னிடம் நிறைய செல்ல பிராணிகள் உள்ளன. ஆனால் அதனுடைய புகைப்படங்களை நான் சமூக வலைத்தளங்களில் பதிவிட விரும்பவில்லை. அவை என்னை விட பிரபலமாவதை நான் விரும்பவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
Next Story






