என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![மர்மங்களும் குழப்பங்களும் நிறைந்த அஞ்சலியின் ஃபால்.. கவனம் ஈர்க்கும் டிரைலர்.. மர்மங்களும் குழப்பங்களும் நிறைந்த அஞ்சலியின் ஃபால்.. கவனம் ஈர்க்கும் டிரைலர்..](https://media.maalaimalar.com/h-upload/2022/11/26/1798032-4.webp)
அஞ்சலி
மர்மங்களும் குழப்பங்களும் நிறைந்த அஞ்சலியின் 'ஃபால்'.. கவனம் ஈர்க்கும் டிரைலர்..
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அஞ்சலி தற்போது நடித்துள்ள வெப் தொடர் 'ஃபால்'.
- இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது.
'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
ஃபால்
இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபால்' வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் தொடரின் ரீமேக்காகும். இதில், எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ஃபால்
இந்த தொடருக்கு அஜேஷ் இசையமைக்க கிஷன் சி செழியன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இத்தொடரை இயக்குவது மட்டுமல்லாமல் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் இயக்குனர் சித்தார்த் ராமசாமி. இந்த தொடரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
ஃபால்
இந்நிலையில், இந்த தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. மர்மங்களும் குழப்பங்களும் நிறைந்ததாக வெளியாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. 'ஃபால்' வெப் தொடர் வருகிற டிசம்பர் 9 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.