என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
அஜித் பட டைட்டிலை கைப்பற்றிய பிரபல நடிகர்
- கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், பிகில், ஜடா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கதிர்.
- இவர் தற்போது நடித்து வரும் புதிய படத்திற்கு அஜித் பட டைட்டிலை வைத்துள்ளனர்.
2013-ஆம் ஆண்டு வெளியான மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கதிர். அதன்பின்னர் கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், பிகில், ஜடா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சுழல் என்ற வெப் தொடர் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
இவர் தற்போது ஷிவ் மோஹா இயக்கத்தில் குமார் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் கதிருக்கு ஜோடியாக பேச்சுலர் படத்தின் மூலம் பிரபலமடைந்த திவ்யபாரதி நடிக்கிறார். இப்படத்திற்கு 1995-ஆம் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் அஜித் மற்றும் சுவலஷ்மி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஆசை படத்தின் டைட்டிலை வைத்துள்ளனர்.
இந்நிலையில் 'ஆசை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் கதிர் மற்றும் திவ்யபாரதி இருவரின் புகைப்படம் தலைகீழாக இருப்பது போல் அமைந்துள்ளது. ரொமான்டிக் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படம் 2019-ஆம் ஆண்டு அனுராஜ் மனோகர் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான இஷ்க் படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.