என் மலர்
சினிமா செய்திகள்

பொன்மாலை பொழுது.. முன்னணி இயக்குனர்களின் சங்கமம்
- கார்த்திக் சுப்பராஜ் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
- இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், சசி, முருகதாஸ், லிங்குசாமி, கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் ஒரே இடத்தில் கூடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்றை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், மொன்மாலை பொழுது என்று குறிப்பிட்டுள்ளார். முன்னணி இயக்குனர்கள் ஒன்றாக இணைந்திருக்கும் இந்த நிகழ்வால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
Next Story






