search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெந்து தணிந்தது காடு: மல்லிப்பூ பாடல் குறித்து சுவாரஸ்யம் பகிர்ந்த கெளதம் மேனன்
    X

    கவுதம் வாசுதேவ் மேனன்

    வெந்து தணிந்தது காடு: 'மல்லிப்பூ' பாடல் குறித்து சுவாரஸ்யம் பகிர்ந்த கெளதம் மேனன்

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு.
    • இப்படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த 'வெந்து தணிந்தது காடு' கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் முணுமுணுப்பாக இருந்தது.

    கவுதம் வாசுதேவ் மேனன் - சிம்பு

    இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று முன்தினம் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். இவ்விழாவில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சிம்பு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட படக்குழு பலரும் கலந்துக் கொண்டனர். அப்பொழுது பேசிய கவுதம் மேனன் படத்தில் இடம் பிடித்து ஹிட் அடித்த மல்லிப்பூ பாடல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

    கவுதம் வாசுதேவ் மேனன்

    அதில், "மல்லிப்பூ.. பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. முதலில் இந்தப் பாடல் எங்களின் கதை களத்திலேயே இல்லை. ஏ.ஆர்.ரகுமான் சார் தான், 'இப்போதெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களின் உறவுகளுடன் வீடியோ காலில் பேசி வருகிறார்கள். அதே போன்றதொரு காட்சிதான் இந்த படத்தில் வருகிறது. அதை ஏன் நாம பாடலாக பண்ண கூடாது" என கேட்டு, அதுக்கு அப்புறம் தான் மல்லிப்பூ பாடல் உருவானது. இந்த பாடல் இன்று இவ்வளவு பெரிய ஹிட்டடிக்க ஒரே காரணம் ஏ.ஆர் ரஹ்மான் சார் தான்" என்றார்.

    Next Story
    ×