என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட் ஜெயிலர் படத்தின் புதிய அப்டேட்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/17/1793474-2.jpg)
ஜெயிலர்
'ஜெயிலர்' படத்தின் புதிய அப்டேட்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.
- இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
ஜெயிலர்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிவராஜ்குமார் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிவராஜ்குமார்
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Dr.Shiva Rajkumar from the sets of #Jailer 🔥@rajinikanth @NimmaShivanna @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/fLb9KRBRF0
— Sun Pictures (@sunpictures) November 17, 2022