என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![ஜெயிலர் : அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு தயாரான ரஜினி ஜெயிலர் : அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு தயாரான ரஜினி](https://media.maalaimalar.com/h-upload/2023/01/07/1818601-3.webp)
ஜெயிலர்
ஜெயிலர் : அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு தயாரான ரஜினி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெயிலர்
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளதாகத் தெரிவித்து படக்குழு வீடியோவை வெளியிட்டிருந்தது. மேலும், இந்த படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாக இணையதளங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஹைதராபாத் செல்லும் ரஜினி
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் ரஜினி 'ஜெயிலர்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.